ECONOMYNATIONAL

முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 விழுக்காடு அதிகரிப்பு 

கோலாலம்பூர், மே 10– இவ்வாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 விழுக்காடு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 நான்காம் காலண்டில் இந்த உற்பத்தி அளவு 0.3 விழுக்காடாக இருந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏற்பட்டு வரும் கோவிட்-19 நோய்த் தொற்றின் அதிகரிப்பு மற்றும் பொருளாதாரத்தை மீட்யுறச் செய்வதில் ஏற்பட்டுள்ள கடுமையான இடர்பாடுகளுக்கு மத்தியிலும் வலுவான வர்த்தக நிலைத்தன்மை காரணமாக நாடு இந்த பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என்று மூடி‘ஸ் ஆய்வு நிறுவனம் கூறியது.

உற்பத்தி பொருள்களுக்கு உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள தேவை அதிகரிப்பு, கணினி மென்பொருள் பாகங்களுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கி ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்குகிறது.

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாடுகளின் தேவை முக்கிய பங்கினை ஆற்றியதாகவும் அந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறியது.

இவ்வாண்டு மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மலேசிய தொழில்துறை 9.3 விழுக்காடு வருடாந்திர வளர்ச்சியையும் உற்பத்தி துறை 12,7 விழுக்காட்டு வளர்ச்சியையும் மின்னியல் தயாரிப்புத் துறை 10.9 விழுக்காட்டு வளர்ச்சியையும் சுரங்கத் துறை 1.9 விழுக்காட்டு வளர்ச்சியையும் பதிவு செய்தன.

 


Pengarang :