ECONOMYHEALTHNATIONALSELANGOR

மெலாவத்தி அரங்கில் கோவிட்-19 நோயாளிகளா? அது பொய்ச் செய்தி

ஷா ஆலம், மே 16- கோவிட்-19 நோய்க்கு தங்கி சிகிச்சை பெறுவதற்காக பொதுமக்கள் இங்குள்ள மெலாவத்தி அரங்கின் முன் காத்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் காணொளி பொய்யானது என்று பெட்டாலிங் மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் ஃபரிடா அமின் கூறினார்.

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மையமாக மெலாவத்தி அரங்கம் செயல்படுகிறது என்று சிலர் தவறாக புரிந்து கொண்டதே இத்தகைய காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதற்கு காரணம் என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 மதிப்பீட்டு மையமாக மட்டுமே மெலாவத்தி அரங்கம் செயல்பட்டு வருகிறது. அங்கு நோயாளிகள் யாரும் தங்கி சிகிச்சைப் பெறுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று அவர் விளக்கினார்.

கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சைக்காக மெலாவத்தி அரங்கில் காத்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் ஒரு நிமிட காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகளை மதிப்பீடும் செய்யும் மையமாக இந்த அரங்கம் செயல்படுகிறது. இங்கு நோயாளிகள் மதிப்பீடு செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவதா? மருத்துவமனைகளுக்கு அனுப்புவதா? அல்லது செர்டாங்கில் உள்ள கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தில் சேர்ப்பதா? என்று முடிவெடுக்கப்படும் என்று டாக்டர் ஃபாரிடா விளக்கினார். 

மெலாவத்தி அரங்கம் தவிர்த்து கிள்ளான், கோல லங்காட், கோல சிலாங்கூர், சபாக் பெர்ணம், கோம்பாக், உலு சிலாங்கூர், சிப்பாங் உலு லங்காட் ஆகிய எட்டு மாவட்டங்களில் இத்தகைய கோவிட்-19 மதிப்பீட்டு மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :