ECONOMYHEALTHNATIONAL

உருமாறிய நோய்த் தொற்றுகளைக் கட்டுப்படுத்த தடுப்பூசியை விரைந்து வழங்குவீர்- பக்கத்தான் ஹராப்பான் வலியுறுத்து

ஷா ஆலம், மே 17– நாட்டில் பல்வேறு உருமாறிய கோவிட்-19 நோய்த் தொற்றுகளின் பரவலைக் கருத்தில் கொண்டு தடுப்பூசி திட்டத்தை விரைந்து மேற்கொள்ளும்படி கூட்டரசு அரசாங்கத்தை பக்கத்தான் ஹராப்பான் கேட்டுக் கொண்டுள்ளது.

நோன்பு பெருநாள் காலத்தில் தடுப்பூசி செலுத்துவது திடீரென குறைந்துள்ளது கவலையளிக்கும் வகையில் உள்ளது என்று அந்த கூட்டணியின் தடுப்பூசி செயல்குழு கூறியது.

நோன்பு பெருநாள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியது.

பல்வேறு உருமாறிய நோய்த் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அந்நோய் மேலும் பல மடங்குகளாக உருமாற்றம் காண்பதை தடுக்கும் வகையில் தடுப்பூசி இயக்கம் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அக்குழு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

அந்த கூட்டறிக்கையில் எதிர்கட்சி நாடாளுமன்ற  உறுப்பினர்கள் மற்றும் சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் மாநில சுகாதார துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் நோய்த் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மத்திய அரசாங்கம் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை அதிகளிவில் நடத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 


Pengarang :