ECONOMYNATIONAL

தனியார் கிளினிக்குகளில் கோவிட்-19 பரிசோதனைக்கு கட்டண வரம்பை நிர்ணியிப்பீர்- அரசுக்கு வேண்டுகோள்

ரவாங், மே 22– தனியார் கிளினிக்குகளில் கோவிட்-19 பரிசோதனைக்கு கட்டண வரம்பை நிர்ணயிக்கும்படி அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வசதி குறைந்தவர்களும் இந்த சேவையை பெறுவதற்கு இந்நடவடிக்கை வழி வகுக்கும் என்று ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

ஆண்டிஜென் (ஆர்.டிகே-ஏஜி) மற்றும் பெலிமெர்ஸ் (ஆர்.டி.-பிசிஆர்) உபகரணங்கள் வழி கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்வதற்கு தற்போது விதிக்கப்படும் கட்டணம் மக்களுக்கு சுமையை அளிக்கும் வகையில் உள்ளதாக அவர் சொன்னார்.

நோய்த் தொற்று அண்மைய காலமாக அதிகரித்து வரும் காரணத்தால் கோவிட்-19 நோய்த் தொற்று பரிசோதனை என்பது தற்போது அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது என்று அவர் தெரிவித்தார்.

ஆர்.டி.கே.-ஏஜி உபகரணம் வழி மேற்கொள்ளப்படும் சோதனைக்கு தனியார் கிளினிக்குகள் 100 வெள்ளி வரை கட்டணம் விதிக்கின்றன. ஆனால், அதற்கான உண்மையான செலவினம் மிகவும் குறைவானதாகும் என்றார் அவர்.

பொதுமக்கள் சுயமாக முன்வந்து கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இதற்கான கட்டணத்தை 60 வெள்ளி முதல் 70 வெள்ளி வரை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும். இதன் வழி அதிகமானோர் சொந்த செலவில் பரிசோதனை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு  ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :