ECONOMYNATIONALSELANGOR

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கையாள்வதில் சிலாங்கூரை மத்திய அரசு முன்மாதிரியாக கொள்ள வேண்டும்

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கையாள்வதில் சிலாங்கூரை மத்திய அரசு முன்மாதிரியாக கொள்ள வேண்டும்

 

கோம்பாக், மே 22- கோவிட்-19 நோய்த் தொற்றைத் துடைத்தொழிப்பதற்கு சிலாங்கூர் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை மத்திய அரசு முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மேற்கொண்டு வரும் முயற்சிகள் யாவும் நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவதை நோக்கமாக கொண்டதாகும் என்று குவாங் சட்டமன்ற உறுப்பினர் சலாஹூடின் அமிருடின் கூறினார்.

நோய்த் தொற்றின் பாதிப்பை முன்கூட்டியே கணித்த காரணத்தால் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிலாங்கூர் மாநிலம் இலவச பரிசோதனை இயக்கத்தை பெரிய அளவில் நடத்தி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது நெருக்கடியாக சூழலில் மத்திய அரசும் சிலாங்கூர் அரசைப் பின்பற்றி இத்தகைய பரிசோதனை இயக்கங்களை பெரிய அளவில் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இங்குள்ள குவாங் சமூக மண்டபத்தில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :