கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ செந்தோசா தொகுதி வெ.10,000 ஒதுக்கீடு- குணராஜ் தகவல்

ஷா ஆலம், மே 28- கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ செந்தோசா சட்டமன்றத் தொகுதி பத்தாயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

உதவித் தேவைப்படும் தரப்பினருக்கு சமையல் பொருள்களை வழங்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

அடையாளம் காணப்பட்ட 120 குடும்பங்களுக்கு கோதுமை, அரிசி, கிச்சாப், பிஸ்கெட், உடனடி மீ போன்ற அடிப்படை உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

இந்த உதவி நோய்த்  தொற்று பரவலால் குறிப்பாக மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையை ஓரளவு குறைக்க உதவும் என நம்புகிறோம் என அவர் சொன்னார்.

இது போன்ற உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவதற்கான நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்ளவிருப்பதாக சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக பொதுமக்கள் சுயகட்டுப்பாட்டை கடைபிடிக்கும்  அதேவேளையில் எஸ்.ஒ.பி. விதிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


Pengarang :