ECONOMYHEALTHPBTSELANGOR

மேரு தொகுதியில் கோவிட்-19 இலவச பரிசோதனை- 2,600 பேர் பங்கேற்பு

கிள்ளான், மே 28- மேரு சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள சுமார் 2,600 பேர் செலங்கா செயலி வாயிலாக பதிவு செய்திருந்தனர்.

மாநில அரசின் ஏற்பாட்டிலான இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்வதற்காக பொது மக்கள் காலை 8.00 மணி முதல் வரிசையில் காத்திருக்கத் தொடங்கியதாக அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது ஃபக்ருள்ராஸி முகமது மொக்தார் கூறினார்.

பிற்பகல் 2,00 மணி வரை சுமார் இரண்டாயிரம் பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்ட வேளையில் எஞ்சியவர்களை சோதிக்கும் பணி மாலை 4.00 மணி வரை மேற்கொள்ளப்ட்டது என்று அவர் சொன்னார்.

நோய் தொடர்பான சோதனையை மேற்கொள்ள குறுகிய நேரமே எடுத்துக் கொள்ளப்பட்டால் இந்த பரிசோதனை இயக்கம் தங்கு தடையின்றி சீராக நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.

இங்குள்ள கிள்ளான் நகராண்மைக் கழக மண்டபத்தில் நடைபெற்ற இந்த பரிசோதனை இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக எஸ்.ஒ.பி விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :