ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 9,020 ஆக உயர்வு

ஷா ஆலம், மே 29– கோவிட்-19 நோய்த்  தொற்று எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. நேற்று 8,290 ஆக இருந்த அந்த எண்ணிக்கை இன்று 9,020 ஆக உயர்வு கண்டுள்ளது.

அதிகம் பேர் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வழக்கம் போல் சிலாங்கூர் மாநிலம்  முதலிடம் வகிக்கிறது. இங்கு 2,836 பேருக்கு இந்நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

அதற்கு அடுத்த நிலையில் கிளந்தான் (907), நெகிரி செம்பிலான் (898), கோலாலம்பூர் (789), சரவா (726) ஆகிய மாநிலங்கள் உள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட பிற மாநிலங்கள் வருமாறு-

கெடா (468, ஜோகூர் (468), பினாங்கு (245), மலாக்கா (340), பேராக் (272), சபா (265), லபுவான் (253), பகாங் (216), திரங்கானு (189), புத்ரா ஜெயா (29), பெர்லிஸ் (19).


Pengarang :