பூச்சித் தொல்லையிலிருந்து நெற்பயிர்களைக் காக்க வெ. 10 லட்சம் ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூன் 2– சபாக் பெர்ணம் வட்டாரத்தில் சுமார் 6,632 ஹெக்டர் நெற்பயிர்களை பூச்சித் தொல்லையிலிருந்து காப்பாற்ற மாநில அரசு 10 லட்சத்து 35 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

தண்டுகளில் ஊடுருவக்கூடிய மற்றும் இலைகளைச் சுருங்கச் செய்யக்கூடிய புழுக்களை அழிப்பதற்கு நிபுணர்கள் பரிந்துரைத்த பூச்சிக் கொல்லி மருந்துகளை  தெளிப்பதற்கு அந்த நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என்று விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

பஞ்சாங் பெடேனா பகுதியில் உள்ள 3,415 ஹெக்டர் நிலப்பரப்பில் சுமார் ஐம்பது விழுக்காட்டு நெற்பயிர்கள் இத்தகைய நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இந்த இரண்டு வகை நோய்கள் காரணமாக பாகான் தெராப் மற்றும் சுங்கை பாஞ்சாங் பகுதியில் 3,217 ஹெக்டர் நெல் வயல்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த பூச்சித் தொல்லையிலிருந்து நெல் வயல்களைக் காப்பாற்றாது போனால் நெல் உற்பத்தி  70 முதல் 80 விழுக்காடு வரை பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :