ECONOMYNATIONALPBTSELANGOR

பொது முடக்க காலத்தில் நீர் வளங்கள் மீது 24 மணி நேர கண்காணிப்பு

ஷா ஆலம், ஜூன் 1- முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் மாநிலத்திலுள்ள நீர் வளங்கள் மீது 24 மணி நேர கண்காணிப்பு நடவடிக்கையை லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில நீர் நிர்வாக வாரியம்  மேற்கொள்ளும்.

நீர் மாசுபாடு ஏற்பட்டு அதனால் நீர் விநியோகத் தடை ஏற்படும் சம்பவங்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.

முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் நீர் மாசுபடும் சம்பவங்கள் நிகழ்வதை தடுப்பதற்காக நீர் வளங்கள் மீது 24 மணி நேர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள தனது விரைவு சோதனைக் குழுவை லுவாஸ் பணித்துள்ளது என அந்த அறிக்கை தெரிவித்தது.

இம்மாதம் முதல் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தின் போது ஷா ஆலம் செக்சன் 15 மற்றும் பாங்கியில் உள்ள தனது இரு கிளை அலுவலங்களும் மூடப்பட்டிருக்கும் என்றும் அந்த வாரியம் கூறியது.


Pengarang :