ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்- சபாக் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

சபாக் பெர்ணம், ஜூன் 13– கடந்த மாதம் அமல்படுத்தப்பட்ட கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை சபாக் பெர்ணம் வட்டார மக்கள் ஒரு படிப்பினையாக கொள்ள வேண்டும் என நினைவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 நோய்த் தொற்று அப்பகுதியில் மூன்று உயிர்களைப் பலி கொண்டுள்ளதால் இவ்விகாரத்தில் அலட்சியப் போக்குடன் செயல்படுவதை வட்டார மக்கள் தவிர்க்க வேண்டும் என்று சபாக் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அகமது முஸ்தாயின் ஓத்மான் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று எவ்வளவு கொடுமையானது என்பதை மக்கள் இப்போது உணர்கின்றனர். முன்பு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்வதில் அலட்சியம் காட்டியவர்கள் இப்போது அக்கறை காட்டத் தொடங்கியுள்ளனர் என்றார் அவர்.

நோய்த் தொற்று பரவல் காரணமாக சபாக் பெர்ணம் மாவட்டத்தின் மூன்று குடியிருப்பு பகுதிகளில் கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கி இரு வாரங்களுக்கு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டது குறித்து அவர் இவ்வாறு கருத்துரைத்தார். அந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நேற்றுடன் முடிவுக்கு வந்தது.


Pengarang :