MEDIA STATEMENTNATIONAL

பி.கே.ஆரில் காலியாக உள்ள சில பதவிகளை இப்பொழுது கட்சி நிரப்பாது.

கோலாலம்பூர், ஜூன் 20 – மறு கட்சித் தேர்தல் நடைபெறும் வரைகாலியாக உள்ள சில பதவிகளை நிரப்புவதற்கில்லை என பார்ட்டி கெஅடிலன் ராக்யாட்டின் (பி.கே.ஆர்) மத்திய மட்டத்தில்  மத்திய தலைமை மன்றம் (எம்.பி.பி) ஒப்புக் கொண்டுள்ளது.

துணைத் தலைவர், உதவித் தலைவர் மற்றும் சபை நிர்வாக உறுப்பினர்கள் இடம் காலியாக உள்ளதைத் தொடர்ந்து மே 1 ம் தேதி நடைபெற்ற எம்.பி.பி கூட்டத்தில் இந்த முடிவு செய்யப்பட்டதாக பி.கே.ஆர் பொதுச்செயலாளர் டத்தோஶ்ரீ சைபுடின் நாசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

“இதன் மூலம், எங்கள் பழைய நண்பர்கள் சிலர் கட்சியை விட்டு வெளியேறியபின், காலியாக உள்ள பதவிகளை நிரப்பாமலே, மத்திய மட்டத்தில் கட்சியின் இயக்கம் நிலைத்திருக்கும்” என்று அவர் இன்று கட்சியின் 2020 ஆண்டு தேசிய காங்கிரசில் தனது வரவேற்பு உரையில் கூறினார்.

முன்னாள் பி.கே.ஆர் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகாமட் அஸ்மின் அலி மற்றும் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஜுரைடா கமருதீன் ஆகியோர் கடந்த ஆண்டு கட்சியை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து இந்த பதவிகள் காலியாக இருந்தன, அதே நேரத்தில் டாக்டர் ஏ சேவியர் ஜெயக்குமார் பி.கே.ஆர் உறுப்பினர் மற்றும் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

2021 ஆண்டு தேசிய காங்கிரஸ் அடுத்த ஆண்டு 2022 காங்கிரசுடன் ஒரே நேரத்தில் நடைபெறும் என்றும் சைப்புடின் அறிவித்தார். தொகுதிகளுக்கான வருடாந்திர பொதுக் கூட்டங்கள் (ஏஜிஎம்) அடுத்த ஆண்டு நடைபெறும், ஆனால் அந்தந்த ஆண்டு அறிக்கைகள் இந்த ஆண்டு சங்கங்களின் பதிவாளரிடம் (ரோஸ்) சமர்ப்பிக்கப்படும் என்றார்.

இந்த ஆண்டு நவம்பர் 16 முதல் ஏப்ரல் 29 வரை 6,259 புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைந்த நிலையில், அதிக எண்ணிக்கையிலான புதிய உறுப்பினர்கள் பதிவுகளுடன்  சுங்கை புலோ பிரிவு முன்னிலையில் உள்ளதாக  சைஃபுதீன் கூறினார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 259 புதிய கிளைகள் உட்பட, நாடு முழுவதும் 2,028 கிளைகளை கட்சி கொண்டுள்ளது என்று பி.கே.ஆர் தலைமை அமைப்பு செயலாளர் நிக் நஸ்மி நிக் அகமது தெரிவித்தார்.

“கட்சியால் இலக்கு வைக்கப்பட்ட தொகுதிகளில்  ஒரு கிளையாவது செயல் படுவதை  உறுதிப்படுத்த  முடிவு செய்துள்ளோம்,” என்று அவர் மாநாட்டில் தனது வரவேற்பு உரையில் கூறினார். காலை 8 மணிக்கு தொடங்கி ஜூம் இணைய தரவின் மூலம் சுமார் 2,000 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.

 


Pengarang :