ECONOMYHEALTHNATIONALPBTPENDIDIKAN

தேசிய மீட்சித் திட்ட இரண்டாம் கட்டத்தில் சிகையலங்கரிப்பு நிலையங்கள் புத்தக கடைகளை திறக்க அனுமதி

ஷா ஆலம், ஜூன் 28– தேசிய மீட்சித் திட்டம் இரண்டாம் கட்டத்தை எட்டும் போது சிகையலங்கரிப்பு நிலையங்கள், புத்தக மற்றும் எழுது பொருள் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட வியாபார மையங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

இவ்விரு விற்பனை மையங்களும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

இரண்டாம் கட்ட தேசிய மீட்சித் திட்டத்தில் கீழ்க்கண்ட வர்த்தகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

  1. வாகனத் தொழில்துறை, ஏற்றுமதி நோக்கத்திற்கான பளிங்கு கல், தளவாடப் பொருள் ரப்பர், இரும்பு, உலோகம், சிமெண்ட்
  2. கணினி, தொலைத் தொடர்பு சாதனங்கள், மின்னியல் பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் கார் கழுவும் மையங்கள்

உணவகங்கள் மற்றும் உணவு விற்பனை சார்ந்த தொழில் துறைகள், சாலையோரக் உணவுக் கடைகள், அங்காடி கடைகள் அதிகாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று  இஸ்மாயில் சொன்னார்.

எனினும், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடப்பதற்கு  இரண்டாம் கட்ட தேசிய மீட்சித் திட்டத்தின் போது அனுமதிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :