ECONOMYHEALTHNATIONAL

தெலுக் பங்ளிமா காராங்கில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் உடைக்கப்படும்

தெலுக் பங்ளிமா காராங்கில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் உடைக்கப்படும்

 

கோல லங்காட், ஜூன் 30- தெலுக் பங்ளிமா காராங், ஜாலான் பண்டார் லாமாவில் உள்ள தனியார் படகுத் துறை பகுதியின் 14 லாட் நிலங்களில் இருக்கும் சட்டவிரோத கட்டுமானங்கள் விரைவில் உடைக்கப்படும்.

அப்பகுதியில் மறுசூழற்சி செய்யப்பட் டயர்களின் துகள்கள் வைக்கப்பட்டிருந்த 0.37 ஹெக்டர் நிலப்பரப்பில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து அங்கு சட்டவிரோத கட்டுமானங்கள் இருப்பது தெரிய வநததாக சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

அங்குள்ள 14 லோட் நிலங்களில் ஏழு தொழிலியல் நில அந்தஸ்தை கொண்டுள்ளன. எனினும், திட்டமிடல் அனுமதி எதனையும் அவை பெறவில்லை. விவசாய நில அந்தஸ்தை கொண்டுள்ள எஞ்சிய நிலங்கள் இதர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவுக்கு போதுமான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றார் அவர்.

சம்பந்தப்பட்ட நிலங்களை தொழிலியல் நிலங்களாக மாற்றுவதற்கு அதன் உரிமையாளர் கடந்த 2018ஆம் ஆண்டு விண்ணப்பம் செய்திருந்தார். எனினும், அதற்காக செலுத்த வேண்டிய 10 லட்சம் வெள்ளி பிரீமியத் தொகையை அவர் செலுத்த வில்லை என்று அவர் தெரிவித்தார்.

தீச்சம்பவம் ஏற்பட்ட பகுதிக்கு நேற்று வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த டயர்களின் துகள்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்றும் சிம்மோரில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை மற்றும் லங்காவியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு எரிபொருளாக அவை பயன்படுத்தப்பட்டன என்றும் அவர் சொன்னார்.

இத்தகைய கழிவுகளை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவற்றை இறக்குமதி செய்வதற்கு வழங்கிய அனுமதியை வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 


Pengarang :