ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் திட்டத்தின் வாயிலாக 44,000 பேர் தடுப்பூசி பெற்றனர்.

சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் திட்டத்தின் வாயிலாக 44,000 பேர் தடுப்பூசி பெற்றனர்.

 

ஷா ஆலம், 11- செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில அரசின் சொந்த தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாக கடந்த வியாழக்கிழமை வரை சுமார் 44,000 பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரிஸ் எனப்படும் தொழில்துறையினருக்கான தடுப்பூசி திட்டத்தின் கீழ் 32,000 பேரும் செல்வேக்ஸ் கம்யூனிட்டி எனப்படும் பொதுமக்களுக்கான  திட்டத்தில் 11,000 பேரும் தடுப்பூசி பெற்றதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பொதுமக்களுக்கான தடுப்பூசித் திட்டம் சற்று சுணக்கம் கண்டிருந்தாலும்  மொத்தம் உள்ள 25 லட்சம் தடுப்பூசிகளில் 20 விழுக்காடு அதாவது 500,000 தடுப்பூசிகளை அத்தரப்பினருக்குச் செலுத்தும் திட்டம் சரியான இலக்கில் மேற்கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

தொகுதிக்கு ஆயிரம் தடுப்பூசிகள் என்ற அடிப்படையில் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டம் கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த தடுப்பூசித் திட்டத்தை நாம் அவசரகதியில் மேற்கொள்ள முடியாது. காரணம் இரண்டாவது தடுப்பூசியைச் செலுத்தினால் மட்டுமே அப்பணி முழுமையடையும். இரண்டாவது தடுப்பூசியைச் செலுத்தும் பணி இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கும் என்றார் அவர்.

மாநில மக்களின் பயனுக்காக தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தின் கீழ 20 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவது தொடர்பான அறிவிப்பை அமிருடின் கடந்த மாதம் வெளியிட்டார்.


Pengarang :