HEALTHMEDIA STATEMENTNATIONALPBT

சமூக நல இல்லங்களுக்கு கோல குபு பாரு தொகுதி உதவி

ஷா ஆலம், ஜூலை 11-உதவிப் பொருள்கள் வழங்குவதில்  வெள்ளைக் கொடிகளைப் பறக்கவிடுவோர் மற்றும் சமூக நல இல்லங்களுக்கு கோல குபு பாரு தொகுதி முன்னுரிமை அளித்து வருகிறது.

சமூக நல இல்லங்கள் பொதுமக்கள் மற்றும் சமூக நல இல்லங்கள் வழங்கும் உதவிகளை பெரிதும் சார்ந்துள்ளதால் அத்தகைய இல்லங்களில் தங்கியிருப்போர் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூக நல இல்லங்களும் இதற்கு விதிவிலக்கில்லை.ஆகவே, இந்த இல்லங்களுக்கு உணவு  உள்பட பல்வேறு உதவிகளை வழங்கும் கடப்பாடு நமக்கு உள்ளது என்றார் அவர்.

உணவுப் பொருள்கள் தவிர்த்து பால், பெம்ப்பர்ஸ் உள்ளிட்ட பொருள்களையும் தேவையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு தாங்கள் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உதவி தேவைப்படும் மக்களுக்கு தொகுதி சேவை மையம், சமூகத் தலைவர்கள், மாவட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும்  அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் மூலம் உணவுப் பொருள்கள் வழங்குகிறோம்.

உள்ளுர்  பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு உணவுப் பொருள்கள் யாவும் சுற்றுவட்டாரங்களில் உள்ள கடைகளிலே வாங்கப்படுகின்றன என்றார் அவர்.


Pengarang :