ECONOMYHEALTHNATIONALPBT

சிலாங்கூரில் 3 புதிய தடுப்பூசி மையங்கள் திறப்பு- 135,000 பேருக்கு தடுப்புசி செலுத்த இலக்கு 

பாங்கி, ஜூலை 11- சிலாங்கூர் மாநிலத்தில் மேலும் மூன்று தடுப்பூசி செலுத்தும் மையங்கள் இன்று தொடங்கி செயல்படவுள்ளன. மூன்று மாவட்டங்களில் திறக்கப்படும் அந்த மையங்களின் வாயிலாக தினசரி 3,000 முதல் 5,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும்.

கிள்ளானில் உள்ள வைண்ட்ஹாம் ஹோட்டல்,  சபாக் பெர்ணம், டேவான் துன் அப்துல் ரசாக் மற்று புக்கிட் பெருந்தோங், கோல்ப் அண்ட் கன்ட்றி கிளப் ஆகிய இடங்களில் அந்த மையங்கள் திறக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலத்தில் தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கையை தினசரி 135,000 ஆக உயர்த்துவதற்கு இந்த மூன்று மையங்களும் துணை புரியும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

தற்போது மாநிலத்தில் தினசரி 92,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. புதிய இலக்கை அடைவதை உறுதி செய்யும்படி அதிகாரிகளை நாங்கள் பணித்துள்ளோம் என்றார் அவர்.

பாங்கி  அவென்யூ மாநாட்டு மையத்தில் செயல்படும் தடுப்பூசி செலுத்தும் மையத்தை நேற்று பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :