ECONOMYHEALTHNATIONALPBTPENDIDIKAN

பி.கே.பி.டி. பகுதிகளில் 48 மணி நேரத்தில் உணவுக் கூடைகள்  விநியோகம்-  மந்திரி புசார் உத்தரவு

ஷா ஆலம், ஜூலை 17-  நாளை  கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை (பி.கே.பி.டி.) அமல்படுத்தப்படவுள்ள நான்கு மாவட்டங்களில் 48 மணி நேரத்திற்குள் உணவுப் பொருள் உதவி சென்று சேர வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உத்தரவிட்டுள்ளார்.

இன்று காலை நடைபெற்ற கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார். 

பி.கே.பி.டி. அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைவருக்கும் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும். நோய்த் தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மற்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் புதிதாக நான்கு மாவட்டங்களில் உள்ள நான்கு இடங்களில் இன்று தொடங்கி வரும் இரண்டு வாரங்களுக்கு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

டாமன்சாரா, டாமாய் அடுக்குமாடி குடியிருப்பு, அம்பாங், ஜாலான் பண்டான் இண்டா,  கிள்ளான், ஜாலான் பத்து நீலாம், கோம்பாக், தாமான் சமூட்ரா ஆகியவையே அந்த நான்கு பகுதிகளாகும்.


Pengarang :