HEALTHMEDIA STATEMENTNATIONALPBT

பெர்மாத்தாங் தொகுதியின் உதவித் திட்டத்தின் வழி 1,000 குடும்பங்கள் பயன்

ஷா ஆலம், ஜூலை 18- பெர்மாத்தாங் தொகுதி  சேவை மையத்தின் ஏற்பாட்டில் இவ்வாண்டு தொடங்கி மேற்கொள்ளப்பட்ட இரு உதவித் திட்டங்கள் மூலம் கோவிட்-19 பெருந்தொற்றினால் வருமானம் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரம் குடும்பங்கள் பயனடைந்தன.

பெர்மாத்தாங் பரிவு எனும் திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு 80 வெள்ளி மதிப்பில் 5 கிலோ அரிசி, சீனி, உப்பு, சமையல் எண்ணைய், பிஸ்கட், சார்டின், டின் பால், பீகூன் உள்ளிளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார்.

மற்றொரு திட்டமான காக்காக் கேர் எனும் திட்டத்தின் வழி சிறார்கள் மற்றும் பெரியவர்களுக்கான பெம்பர்ஸ், பால் மாவு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன என்றார் அவர்.

உணவு விநியோகம் துண்டிக்கப்பட்டவர்கள் அல்லது நோய்த் தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் குறித்த தகவல் கிடைக்கப்பெறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக அல்லது கிராம மேம்பாட்டுக் குழு பிரதிதிதிகள் வாயிலாக உதவிப் பொருள்கள் சேர்ப்பிக்கப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

தொகுதி மக்களுக்கான இந்த உதவித் திட்டங்கள் யாவும் கித்தா சிலாங்கூர் திட்டத்தின் வழி மாநில அரசு வழங்கிய மானியம் மற்றும் சொந்த நிதியைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :