ECONOMYHEALTHNATIONALPBT

இந்திய உயர் கல்விக்கூட மாணவர்களுக்கு சுமார் 10 லட்சம் வெள்ளி நிதியுதவி- சிலாங்கூர் அரசு வழங்கியது

ஷா ஆலம், ஆக 5- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவு குடும்பங்களைச் சேர்ந்த இந்திய உயர் கல்விக்கூட மாணவர்களுக்கு நிதியதவி வழங்கப்பட்டது.

மாநிலத்தைச் சேர்ந்த 280 மாணவர்கள் 9 லட்சத்து 98 ஆயிரத்து 750 வெள்ளி மதிப்பிலான காசோலைகளை பரிவுமிக்க அரசாங்கத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் அவர்களிடமிருந்து  பெற்றுக் கொண்டனர்.

இந்திய மாணவர்களின் கல்வி நலனில் மாநில அரசு கொண்டுள்ள அக்கறையை இந்த கல்வி நிதியுதவித் திட்டம் புலப்படுத்துவதாக  கணபதி ராவ் கூறினார்.

கடந்த 2013ஆம்  ஆண்டு முதல் இதுவரை 741 இந்திய மாணவர்கள் இந்த நிதியுதவி மூலம் பயனடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முதல் கட்டமாக 259 மணவர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்ட வேளையில் எஞ்சிய 21 மாணவர்கள் இரண்டாம் கட்டத்தில் நிதியுதவி பெறுவர் என்றார் அவர்.

இந்த நிதியைப் பெற்றவர்கள் அதனைத் திரும்பச் செலுத்தத் தேவையில்லை. மேலும், இந்த தொகை சம்பந்தபட்ட மாணவர்கள் பயிலும் உயர்கல்விக் கூடங்களின் பெயரில் வழங்கப்படுவதால் வேறு நோக்கங்களுக்கு இந்தியை பயன்படுத்துவற்கான வாய்ப்பு இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 


Pengarang :