HEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

கோவிட்-19 நோயாளிகளுக்கு உதவ 60,000 உமிழ்நீர் சோதனைக் கருவிகள் விநியோகம்

ஷா ஆலம், ஆக 13– கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உமிழ்நீர்  மாதிரியைக் கொண்டு சுய பரிசோதனை செய்வதற்கு ஏதுவாக 60,000 பரிசோதனைக் கருவிகளை மாநில அரசு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி விநியோகிக்கவுள்ளது.

மாநிலத்திலுள்ள 56 சட்டமன்ற உறுப்பினர் சேவை மையங்கள் மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பு அலுவலகங்கள் வாயிலாக இந்த கருவிகள் விநியோகிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

உமிழ்நீர் மூலம் சுய பரிசோதனை செய்ய உதவும் 60,000 உபகரணங்களை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்குவதற்கான ஏற்பாட்டை செல்கேட் ஹெல்த்கேர் நிறுவனத்தின் வாயிலாக மாநில அரசு மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.

இது தவிர, செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தை விளையாட்டாளர்கள் உள்பட இதர தரப்பினருக்கும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிக மரணச் சம்பவங்கள் நிகழும் பகுதிகளில் கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை நடத்த மாநில அரசு தயாராக உள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :