ECONOMYHEALTHNATIONALPBT

குகுசான் செமாராக் பகுதியில் இன்றிரவு பி.கே.பி.டி. நீக்கம்

ஷா ஆலம், ஆக 15, கோத்தா டாமன்சாரா, பிஜேயு 5 உள்ள குகுசான் செமராக் அடுக்குமாடி கடியிருப்பு பகுதியில் அமல்படுத்தப்பட்டிருந்த கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) இன்று இரவுடன் முடிவுக்கு வருகிறது.

இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நிர்ணயிக்கப்பட்டதை விட ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே அகற்றப்படுவதாக பெட்டாலிங் மாவட்ட பேரிடர் நிர்வாக குழுவின் தலைவர் டத்தோ ஜொஹாரி அனுவார் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று சோதனை, கோவிட்-19 நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்ததைத் தொடர்ந்து அங்கு பி.கே.பி.டி. ஆணை அகற்றப்படுவதாக அவர் சொன்னார்.

பி.கே.பி.டி. அமலாக்க காலத்தில் அங்குள்ள 2,514 குடியிருப்பாளர்களிடம் பி.சி.ஆர்/ஆர்.டி.கே. முறையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 501 பேருக்கு  நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நோய்ப் பரவல் அதிகரிப்பு காரணமாக குகுசான் சொமாராக் பகுதியில் இம்மாதம் 4 ஆம் தேதி தொடங்கி கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டது.


Pengarang :