KUALA LUMPUR, 18 Mei — Yang di-Pertuan Agong Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah berangkat tiba bagi menyempurnakan Istiadat Pembukaan Mesyuarat Pertama Penggal Ketiga Parlimen ke-14 di Bangunan Parlimen hari ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA KUALA LUMPUR, May 18 — The Yang di-Pertuan Agong Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah arrives at the Parliament Building to officiate the Third Session of the 14th Parliament today. –fotoBERNAMA (2020) COPYRIGHTS RESERVED
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசியாவின் 9 வது பிரதமர் நியமனம் தொடர்பாக ஆட்சியாளர்களின் சிறப்பு கூட்டம் இன்று.

கோலாலம்பூர், ஆக 20 – மலேசிய ஆட்சியாளர்கள் இன்று இஸ்தானா நெகாராவில் ஒரு சிறப்பு கூட்டத்தை கூட்டி நாட்டின் தற்போதைய அரசியல் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, குறிப்பாக மலேசியாவின் 9 வது பிரதமர் நியமனம் தொடர்பாக விவாதிக்கவுள்ளனர்.

கூட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, மாட்சிமை தங்கிய பேரரசர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தபா பில்லா ஷா அதற்கு தலைமை வகிப்பார்.

கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 43 (2) (a) இன் படி நாட்டின் புதிய பிரதமராக டேவான்  ராக்யாட்டில் (மக்களவை) பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் (MP) நியமனத்தில் கண்டிப்பாக கவனம் செலுத்தப்படும். ஆகஸ்ட் 16 அன்று  டான் ஸ்ரீ மொகிதீன் யாசின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த அவசியம் ஏற்பட்டது.

நேற்று, பாரிசன் நேஷனல் (பிஎன்), பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்), கபுங்கான் பார்டி சரவாக் (ஜிபிஎஸ்) , பாஸ் மற்றும் சுயேட்சைகள் ஆகிய 114 எம்.பி.க்களுடன் அரசர் சந்திப்பு  வழங்கினார்.

எம்.பி.க்களுடன் அரசர் சந்திப்பில், எம்.பி.க்கள் தங்கள் பிரதமர் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாகக் கூறி அவர்கள் அனுப்பிய சட்டரீதியான அறிவிப்புகளை (எஸ்டி) வாய்மொழியாக  சரிபார்க்கச் செய்வதாக இருந்தது. பல்வேறு கட்சிகள் மற்றும் எம்.பி.க்கள் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில், அம்னோ (UMNO)துணைத் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் டான் ஸ்ரீ மொகிதீன் யாசினுக்குப் பதிலாக பிரதமராக நியமிக்கப்படுவது உறுதியாகத் தெரிகிறது,.

பக்காத்தான் ஹரப்பான் (பிஎச்) மற்றும் அதன் தோழமை எம்பிக்களுக்கு, அரசர் சந்திப்பு  வழங்கவில்லை என்பதும்,  அதே நேரத்தில் பக்காத்தான் ஹராப்பான் டத்தோ ஶ்ரீ அன்வாரை தங்கள் வேட்பாளராகப் பராமரித்து வருகிறது  என்பதும் கவனிக்கத்தக்கது.

அல்-சுல்தான் அப்துல்லா புதிய பிரதமர் தனது சட்டபூர்வமான தன்மையையும் டேவான் ராக்யாட்டில் பெரும்பான்மை ஆதரவையும் தீர்மானிக்க விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆணையிட்டார்.

வெற்றி பெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் வெற்றி பெறாதவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும், நல்லிணக்கத்தை பேண ஒரு குழுவாக பணியாற்றவும் மாமன்னர் நினைவூட்டினார்.

 


Pengarang :