Containers carrying the first batch of Pfizer-BioNTech COVID-19 vaccines are unloaded from a plane at the MASkargo Complex in Sepang, Malaysia February 21, 2021. Malaysia Information Department/Fandy Azlan/Handout via REUTERS
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தேசிய தடுப்பூசி விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சிலாங்கூரிலிருந்து தடுப்பூசி கடன்.

ஷா ஆலம், ஆக20 – குறைந்த தடுப்பூசி கையிருப்புகளை கொண்டுள்ள பிற மாநிலங்களுக்கு 500,000 தடுப்பூசி மருந்துகளை வழங்கிய சிலாங்கூர் அரசுக்கு சுகாதார இயக்குனர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நன்றி தெரிவித்தார்.

நேற்றிரவு ஒரு ட்விட்டர் பதிவில், டாக்டர் நூர் ஹிஷாம் தேவைப்படுகிற மாநிலங்களுக்கு உதவி செய்வதில் சிலாங்கூரின் முயற்சிகளைப் பாராட்டினார்.  மந்திரி புசார் மற்றும் சிலாங்கூர் அரசாங்கத்திற்கு  தனது நன்றியை கூறுவதாகவும் தடுப்பூசிகள் தேவைப்படும் பிற மாநிலங்களின் மீது அக்கறை மற்றும் பரிவு கொண்டு உதவுவது, தேசிய தினத்தை கொண்டாட உள்ள இந்நேரத்தில் ஒற்றுமையை வளர்க்கும் உன்னத செயல் என்றார்.

மலேசியா கேர்ஸ் (மலேசியா ப்ரிஹடின்).” பரிவுமிக்க மலேசியா என்று ட்விட்டர் பதிவில் டாக்டர் நூர் ஹிஷாம் தேசிய தடுப்பூசி விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சிலாங்கூரிலிருந்து தடுப்பூசி அளவுகளை கடன் வாங்க வேண்டியிருந்தது என்றும் கூறினார்.

நேற்று, சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிலாங்கூர் தடுப்பூசி திட்டம் (செல்வாக்ஸ்) மூலம் வாங்கப்பட்ட சுமார் 500,000 தடுப்பூசி மருந்துகளை கோவிட் -19 நோய்த்தடுப்பு பணிக்கு (சிஐடிஎஃப்) வழங்க மாநில அரசு ஒப்புக்கொண்டதாக கூறினார்.

தடுப்பூசிகளைப் பெறும் மாநிலங்களில் கெடா, பினாங்கு மற்றும் சபா ஆகியவை அடங்கும் என்று அமிருடின் ஷாரி கூறினார். ஓரிரு மாதங்களில் சிலாங்கூருக்கு சப்ளை திரும்ப வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


Pengarang :