ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சட்டமன்ற கூட்டத்திற்கு பின் தமிழ்ப்பள்ளிகள் உட்பட சிலாங்கூர் மாநில பள்ளிகளுக்கான மானியம் விநியோகிக்கப்படும்

ஷா ஆலம், ஆக 24:  இந்த ஆண்டுக்கான உதவிக்கு விண்ணப்பித்துள்ள பள்ளிகளுக்கு மாநில அரசு உடனடியாக ஒதுக்கீடுகளை விநியோகிக்கும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது கவனத்திற்கு 703 விண்ணப்பங்கள், அதாவது 462 ராக்யாட்  சமய பள்ளிகள், 121 சீன தேசிய வகை பள்ளிகள் (SJK) மற்றும் 101 தமிழ்ப்பள்ளிகளின் SJK கோரிக்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அவரைப் பொறுத்தவரை, விண்ணப்பத்தில் 15 மிஷனரி பள்ளிகள் மற்றும் நான்கு தேசிய வகை மேல்நிலைப் பள்ளிகளும் அடங்கும். “நாங்கள்  பள்ளிகளுக்கு நிதி வழங்கும்  திட்டத்தை தொடர்வோம், ஆனால் நடப்பிலிருந்த நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு (PKP) காரணமாக நாங்கள் இதற்கான தரவுகளை சேகரித்திருந்தும், உடனடியாக மானியம் வழங்க முடியவில்லை.

சிலாங்கூர் சட்டமன்ற (கூட்டத்திற்கு) பிறகு நாங்கள் உடனடியாக ஒதுக்கீடுகளை விநியோகிப்போம். “இந்த ஆண்டு,  நாங்கள் ஒரு சுற்றில் மட்டுமே மானியம் விநியோகிப்போம்” என்று இன்று இங்கு மாநில சட்டமன்ற அமர்வில் கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங்கின் கேள்விக்கு பதிலளிக்கும் போது கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோயால் வருமானம் பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு மாநில பரிவுமிக்க அரசின் கொள்கைக்கு ஏற்ப இந்த உதவி இருப்பதாக அமிருடின் கூறினார். “உண்மையில், இந்த பள்ளிக்கு பி.கே.பியில் உதவி தேவைப்படுகிறது, ஏனெனில் அதன் வருமானத்தின் ஒரு பகுதி கட்டணங்கள் மூலம் பெறப்படுகிறது, ஆனால் பள்ளியைத் திறக்க முடியாததால் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களை சமாளிக்க இது உதவும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :