ECONOMYHEALTHNATIONALPBT

நடமாடும் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்திற்கு 60,000 தடுப்பூசிகள் ஒதுக்கீடு

உலு சிலாங்கூர், ஆக 29–  நடமாடும் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்திற்கு சிலாங்கூர் அரசு 60,000 தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளது. 

இந்த நடமாடும் தடுப்பூசித் திட்டம் அடுத்த மாத மத்தியில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட்டாரத் தலைவர்கள் வழங்கும் பட்டியலின் அடிப்படையில் மாநிலத்திலுள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 500 முதல் 1,000 தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

தடுப்பூசித் திட்டத்தின் போது அடையாளம் காணப்படாத இடங்களையும் தடுப்பூசி பெறுவதற்கு வராதவர்களையும்  இலக்காக கொண்டு இந்த இயக்கம் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, தோட்டப்புறங்கள் மற்றும் கட்டுமானப் பகுதிகள்  அவற்றில் அடங்கும் என்றார் அவர்.

இங்குள்ள டத்தோ அப்துல் ஹமிட் மண்டபத்தில் நடைபெறும் பத்தாங் காலி தொகுதி நிலையிலான செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :