HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று நாட்டில் இன்று 20,579, இனி தொடர்ந்து குறையுமா?

ஷா ஆலம், ஆக 29- நாட்டில் இன்று கோவிட்-19 எண்ணிக்கை 20,579 ஆக குறைந்தது. நேற்று இந்த எண்ணிக்கை 22,597 ஆக இருந்தது.

சிலாங்கூரில்  நேற்று 5,814 பேர் நோய்த் தொற்றுக்கு இலக்காகியிருந்த  நிலையில் இன்று அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆயிரம் குறைந்து 4,591 ஆக ஆனது.

சபா மற்றும் சரவா மாநிலங்களில் முறையே 2,578  மற்றும் 2,522 ஆக நோய்த் தொற்றுப பரவல் பதிவானதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நோயாளிகள் எண்ணிக்கை நான்கு இலக்கமாக பதிவான மாநிலங்களின் எண்ணிக்கையில் ஜொகூர் (1,852), கெடா (1,755), பினாங்கு (1,378), கிளந்தான் (1,316), பேராக் (1,208) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதர மாநிலங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

பகாங் (839), திரங்கானு (789), கோலாலம்பூர் (680), மலாக்கா (636), நெகிரி செம்பிலான் (329), பெர்லிஸ் (56), புத்ரா ஜெயா (48), லபுவான் (2).


Pengarang :