ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

உணவு விநியோகிப்பாளர்கள் பாதுகாப்புக்கு சிறப்புத் திட்டம்- சிலாங்கூர் அரசு பரிசீலனை

ஷா ஆலம், ஆக 30- உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள மோட்டார் சைக்கிளோட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்புத் திட்டம் உருவாக்கப்பட வேண்டியுள்ளது.

இப்பணியில் ஈடுபட்டுள்ள மோட்டார் சைக்கிளோட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம்  அதிகம் உள்ளதால் இந்த பாதுகாப்புத் திட்டம் தேவைப்படுவதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனை தாம் விரைவில் சந்தித்து இப்பரிந்துரையை முன்வைக்கவுள்ளத்தாக அவர் சொன்னார்.

மின் அழைப்பு சேவையில் ஈடுபட்டுள்ள மோட்டார் சைக்கிளோட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஏதுவாக சிறப்பு திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை தாம் மனித வள அமைச்சருடனான சந்திப்பில் எடுத்துரைக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதை தடுப்புதற்காக பணியின் போது மிகுந்த கவனப் போக்கை கடைபிடிக்கும்படி  உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைருடின் கேட்டுக் கொண்டார்.

உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவும் நோக்கில் ரைட் எனப்படும் ரோடா டாருள் ஏசான் திட்டத்தின் வாயிலாக சிலாங்கூர் அரசு 40 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

 


Pengarang :