ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிப்பாங், புத்ரா ஜெயா, கோல லங்காட்டில் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியது

ஷா ஆலம், செப் 5- செமினி ஆற்று நீரில் எழுந்த துர்நாற்றம் காரணமாக நீர் விநியோகம் பாதிக்கப்பட்ட சிப்பாங், புத்ரா ஜெயா, கோல லங்காட் ஆகிய பகுதிகளில் இன்று காலை 7.00 மணியளவில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது.

இதர இரு மாவட்டங்களான உலு லங்காட் மற்றும் பெட்டாலிங் ஆகியவற்றில் முறையே 92.6 மற்றும் 81.4 விழுக்காட்டுப் பகுதிகளில் நீர் விநியோகம் சீரடைந்துள்ளதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

இந்த நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்பட்ட 463 பகுதிகளில் 92.2 விழுக்காடு பகுதிகள் மீண்டும் நீர் விநியோகத்தைப் பெற்றுள்ளன என்றும் அது குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்ட இதர பகுதிகளில் நீர் விநியோகத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கான பணிகள் சீராக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக இதர பகுதிகளில் உள்ள பயனீட்டாளர்கள் நீரை விவேகத்துடன் பயன்படுத்துமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டது.

சுங்கை செமினி ஆற்றில் துர்நாற்றம் வீசுவது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையத்தில் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் ஐந்து மாவட்டங்களில் உள்ள 463 பகுதிகளில் நேற்று காலை முதல் நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.

 


Pengarang :