ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மலேசியர்களில் 69 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், செப் 7- நாட்டில் நேற்று வரை 18 வயதுக்கும் மேற்பட்டவர்களில்  68.8 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 61 லட்சத்து 7 ஆயிரத்து 712 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மொத்தம் 3 கோடியே 13 லட்சத்து 37 ஆயிரத்து 751 தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளதாக கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக்குழு தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

தேசிய  கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று நாடு முழுவதும் 313,751 பேருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசியும் 181,111 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக அது கூறியது.

கடந்த திங்கள்கிழமை வரை 88.3 விழுக்காட்டு மலேசியர்கள் அல்லது 2 கோடியே 6 லட்சத்து 77 ஆயிரத்து 827 பேர்  முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை அரசாங்கம் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தொடக்கியது.


Pengarang :