Speaker Dewan Negeri Selangor, Ng Suee Lim bercakap kepada media ketika ditemubual di Dewan Annexe, Shah Alam pada 13 Julai 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ALAM SEKITAR & CUACASELANGOR

கோல லங்காட் நில விவகாரம்- செல்கேட் குழுவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும்

ஷா ஆலம், செப் 9- கோல லங்காட் உத்தாரா பாதுகாக்கப்பட்ட வனத்தின் ஒரு பகுதி தகுதி மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் செல்கேட் எனப்படும் திறன், பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படை தன்மை மீதான தேர்வுக்குழுவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கான அந்தஸ்தை மீட்டுக் கொள்ளும் விவகாரத்தில் மாநில அரசு அனைத்து நடைமுறைகளையும் சட்ட விதிகளையும் முறையாகப் பின்பற்றியதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கான அந்தஸ்தை மீட்டுக் கொண்டது தொடர்பில் எழுந்த அனைத்து சர்ச்சைகளுக்கும் பதிலளிப்பதற்கு ஏதுவாக செல்கேட் கூட்டத்தை கூட்டும்படி பொறுப்புமிக்க அரசாங்கம் என்ற முறையில் மாநில அரசு சட்டமன்ற சபாநாயகரை (இங் சுயி லிம்)  கேட்டுக் கொள்ளும் என்று அவர் சொன்னார்.

அந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக அதன் நில அந்தஸ்தை மாற்றுவதற்கு  செய்யப்பட்ட முடிவை ரத்து செய்வதாக மாநில அரசு நேற்று அறிவித்திருந்தது.

எனினும், பூர்வக்குடி குடியிருப்புக்காக 104 ஏக்கர் நிலமும் இ.சி.ஆர்.எல். எனப்படும் கிழக்கு கரை இரயில் தண்டாளத் திட்டதிற்கு ஒதுக்கப்படும சிறிய அளவு நிலமும் தொடர்ந்து நிலத் தகுதி மாற்றத்திற்கு உட்பட்டிருக்கும் என்றும் அவர்  அது கூறியிருந்தது.


Pengarang :