BANTING, 4 Jun — Petugas Jabatan Kesihatan Daerah Kuala Langat mengambil sampel cecair mulut dan hidung penduduk setempat yang hadir membuat saringan COVID-19 pada hari kedua Perintah Kawalan Pergerakan secara pentadbiran di Taman Langat Murni, Kuala Langat, hari ini. Kawasan tersebut kini diletakkan di bawah Perintah Kawalan Pergerakan (PKP) secara pentadbiran selepas sebahagian warga asing yang bekerja dengan syarikat pembersihan dan tinggal di taman berkenaan, disahkan positif COVID-19 pada Khamis lalu. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
HEALTHSELANGOR

சிலாங்கூரில் கோவிட்-19 எண்ணிக்கை 2,700 ஆக குறைந்தது

ஷா ஆலம்  செப் 9- சிலாங்கூரில் இன்று 2,700 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. நேற்று இந்த எண்ணிக்கை 2,989 ஆக இருந்தது. கடந்த நான்கு நாட்களாக இம்மாநிலத்தில்  நேர்வுகளின் எண்ணிக்கை தொடர்ந்து  மூவாயிரத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் அதிமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் காரணமாக இங்கு நோய் கண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதனிடையே, நாடு முழுவதும் நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை இன்று 19,307 ஆக பதிவானதாக சுகாதாரத் துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கை கூறியது.

சரவா மாநிலத்தில் மிக அதிகமாக 3,118 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளான வேளையில் சபா (2,298), பினாங்கு  (2,243), ஜொகூர் (2,032) ஆகிய மாநிலங்கள் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன.

கிளந்தான் (1,438), கெடா (1,355), பேராக் (1,341) ஆகிய மாநிலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாட்டின் இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு- திரங்கானு (910), பகாங் (661), கோலாலம்பூர் (513), மலாக்கா (340), நெகிரி செம்பிலான் (207), பெர்லிஸ் (108), புத்ரா ஜெயா (28), லபுவான் (15).


Pengarang :