HEALTHMEDIA STATEMENTSELANGOR

எளிதில் நோய்த் தொற்று அபாயம் உள்ளவர்களின் விவரத்தை செல்வேக்சிடம் தெரியப் படுத்துங்கள் தடுப்பூசியை விரைந்து பெறுங்கள்.

ஷா ஆலம், செப் 9- இன்னும் தடுப்பூசி பெறாமலிருக்கும் நோய்த் தொற்றுக்கான சாத்தியம் அதிகம் உள்ள தரப்பினர் தடுப்பூசி பெறுவதற்காக சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் திட்டத்தில் விரைந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அவ்வாறு பதிந்து கொண்டவர்கள் விரைந்து தடுப்பூசி பெறுவதற்கு ஏதுவாக அவர்களை தமது தரப்பு  தொடர்புக் கொள்ளும் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

மூப்பின் காரணமாக படுக்கையில் இருப்பவர்கள், தடுப்பூசி மையங்களுக்கு வர இயலாத நிலையில் இருப்போர் மற்றும் இன்னும் தடுப்பூசி பெறாதிருக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது சுற்றத்தார் குறித்த தகவல்களை  http://bit.ly/selvaxmobile  என்ற அகப்பக்கத்தில் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

இதன் தொடர்பில் முகநூலில் வெளியிட்டப்பட்டுள்ள போஸ்டரில் உள்ள கியு.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் இத்திட்டத்தில் பதிந்து கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டம் தொடர்பில் மேல் விபரங்களைப் பெற விரும்புவோர் 011-5755 1754 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Pengarang :