ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பக்காத்தானின் ஒத்துழைப்பு நாட்டையும் மக்களையும் இக்கட்டுகளில் இருந்து  மீட்க!, சீரழிவுகளுக்கு துணை போவதில்லை

ஷா ஆலம், 15 செப்டம்பர்: அரசாங்கத்துக்கு பக்காத்தான் வழங்க முன் வந்த ஒத்துழைப்பு நாட்டையும் மக்களையும் இக்கட்டுகளில் இருந்து  மீட்பதேயன்றி, ஊழல்,  சட்ட ஒழுங்கு, பொருளாதார சீரழிவுகளுக்கு துணை போவதில்லை, என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்வார்  தெளிவுப்படுத்தினார்.

மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டாலும் சரிபார்த்து சமநிலைப்படுத்தும் எதிர்க்கட்சியாக பக்காத்தான் ஹரப்பான் (PAKATAN) தனது பங்கை தொடர்ந்து வகிக்கும்  என்றார்  அவர்.

எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம், கூட்டணி தனது பங்கிலிருந்து விலகவில்லை, விலகாது என வலியுறுத்தினார். அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும்  அது துணைபோகும் , அனுமதிக்கும் என்ற கூற்றுக்கு இடமில்லை என்றார்.

போர்ட்டிக்சன் எம்.பி யுமான அவர்., பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான அரசாங்கத்துடன் கையெழுத்திட்டது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமேயன்றி ஒரு விற்பனை\விநியோக ஒப்பந்தம் (சிஎஸ்ஏ) அல்ல என்று விளக்கினார்.

டான் ஸ்ரீ மொகிதீன்  யாசினுடன் இணைந்து பணியாற்றுவதற்கான இதே போன்ற வாய்ப்பை பக்காத்தான் நிராகரித்தது, ஏனெனில் முன்னாள் பிரதமர் அவரின், சி.எஸ்.ஏவை நாங்கள் ஆதரித்து   அரசாங்கத்தை  சட்டப்பூர்வமாக்க  வேண்டும் என்று கோரினார். மேலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பின், விடுக்கப்பட்ட நேர்மையற்ற கோரிக்கை அது என்றார் அவர்.

டத்தோ ஶ்ரீ அன்வாரின் இவ்வுரையின் போது ஒரு அமைச்சரை தவிர மற்றவர்கள் மக்களவைக்கு வெளியிலிருந்தது, அரசாங்க உறுப்பினர்கள்  இந்த ஒப்பந்தத்தை நிராகரிப்பதற்கு ஒப்பாகுமா என்று மூவார் நாடாளுமன்ற சுயேச்சை உறுப்பினர் சைட் சீடேக் கேள்வி  எழுப்பினார்,  அவையிலிருந்த அமைச்சர் அதை மறுத்தார்.

“தற்போதைய அரசாங்கத்துடனான புரிந்துணர்வு எதிர்க்கட்சியாக பாங்கான பணி ஆற்ற வலியுறுத்துகிறது,  கருத்து உடன்பாடு இல்லை என்றால் நாங்கள் மறுக்கலாம், எதிர்க்கலாம்” என்று அவர் இன்று டேவான் ராக்யாட் உரையில் கூறினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தற்போதைய அரசுக்கு பக்காத்தான் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை என்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அன்வார் கூறினார்.

“ஆனால் கோவிட் -19 மற்றும் பொருளாதார பிரச்சினையை தீர்ப்பது போன்ற முக்கிய விவகாரங்களில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பை வழங்காமல் நாட்டுக்கும் மக்களுக்கும் இடர்பாடுகளை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை என்றார் அவர்..

“அதனால்தான் நான் நம்பிக்கை வாக்கெடுப்பை தொடர வேண்டாம் என்பதில் எமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, முக்கிய விவகாரங்களை விவாதித்து ஒன்றாக வேலை செய்யலாம்,” என்று அவர் கூறினார்.

நேற்றைய தினம், பக்காத்தானும் மத்திய அரசும் மலேசிய குடும்ப உணர்வு அடிப்படையில் ஒத்துழைப்பை உருவாக்கியது, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது நாட்டில் வரலாற்று குறிப்பாகும்.

கோவிட் -19க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துதல், நிர்வாக மாற்றம், பாராளுமன்ற சீர்திருத்தம், நீதித்துறையின் சுதந்திரம், சபா, சரவாக்  அந்தஸ்தை மதிக்கும் 1963 மலேசியா ஒப்பந்தம் (MA63) மற்றும் ஒரு சிறப்பு குழுவை நிறுவுதல் ஆகிய ஆறு  திட்டங்களை  அடிப்படையாகக் கொண்டது என்றார் அவர்.


Pengarang :