HEALTHNATIONAL

நாட்டில் கோவிட்-19 எண்ணிக்கை 19,495 ஆக உயர்வு- சிலாங்கூரில் 2,710 பேர் பாதிப்பு

ஷா ஆலம், செப் 15- நாட்டில்  கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து 19,495 ஆக ஆனது. நேற்று இந்த எண்ணிக்கை 15,669 ஆக இருந்தது.

சிலாங்கூரில் நேற்று 2,632 ஆக இருந்த நேர்வுகளின் எண்ணிக்கை இன்று சற்று உயர்ந்து 2,710 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சரவா மாநிலத்தில் நோய்ப் பரவல் எண்ணிக்கை அபரிமித உயர்வு கண்டு 4,709 ஆக ஆகியுள்ளது. நேற்று 1,983 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

சபா மாநிலத்தில் 2,015 பேர் பாதிக்கப்பட்ட வேளையில் ஜொகூர் மாநிலம் 1,860 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட்-19 சம்பவங்களைப் பதிவு செய்த மாநிலங்களில்  பினாங்கு (1,757), கிளந்தான் (1,434), கெடா (1,178), பேராக் (1,174) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு- திரங்கானு (993), பகாங் (766), கோலாலம்பூர் (363), நெகிரி செம்பிலான் (222), மலாக்கா (190), பெர்லிஸ் (108), புத்ரா ஜெயா (16), லபுவான் (0).


Pengarang :