HEALTHNATIONAL

கோவிட்-19 நோய்ப் பரவலால் பாதிக்கப்பட்ட தாமான் கிளேன்மேரி குடியிருப்பாளர்களுக்கு உதவி

ஷா ஆலம், செப் 15- கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட அல்லது வேலை இழந்த தாமான் கிளேன்மேரி யு1 குடியிருப்பைச் சேர்ந்த பி40 குடும்பங்களுக்கு ஸ்ரீ செத்தியா தொகுதி சார்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்தியர்களைப் பெரும்பான்மையினராக கொண்ட இந்த குடியிருப்பைச் சேர்ந்த 35 குடும்பங்களுக்கு அரிசி, சீனி, மாவு, சமையல் எண்ணைய், உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

ஸ்ரீ செத்தியா தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த உணவுப் பொருள் வழங்கும் நிகழ்வில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் கலந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களிடம் உணவுப் பொட்டலங்களை ஒப்படைத்தார்.

நாடு பெருந்தொற்றை எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில் வேலை இழப்பு உள்ளிட்ட காரணங்களால் வருமானம் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சுமையைக் குறைப்பதில் இத்தகைய உதவிகள் ஓரளவு துணை புரியும் என ஹலிமி கூறினார்.

இந்த உணவுப் பொருள் வழங்கும் நிகழ்வை ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் எஸ். குமரவேல் ஏற்பாடு செய்திருந்தார்.

 


Pengarang :