Foto portal Lembaga Kemajuan Ikan Malaysia
ECONOMYNATIONAL

கோவிட் -19 சுய பரி சோதனை கருவிகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்றது சிலரே!

கோலா பெரங், 18 செப்டம்பர்: உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சகம் (KPDNHEP) வர்த்தகர்கள் மற்றும் மருந்து ஆப்ரேட்டர்கள் கோவிட் -19 சுய பரி சோதனை கருவிகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்ற 34 வழக்குகளை மட்டுமே பதிவு செய்துள்ளது.

செப்டம்பர் 5 முதல் நேற்று வரை நாடு முழுவதும் 1,800 -க்கும் மேற்பட்ட இடங்களில் KPDNHEP அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைகளின் விளைவாக இந்த குற்றம் கண்டறியப்பட்டதாக அதன் துணை அமைச்சர் டத்தோ ரோசோல் வாஹிட் கூறினார்.

விலை கட்டுப்பாடு மற்றும் அதிக இலாப எதிர்ப்பு சட்டம் 2011 -ன் படி ஒரே ஒரு வழக்குக்கு RM 250  அபராதம்  வசூலிக்கப் பட்டது. கண்டு பிடிக்கப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை கவலைக்குறியதல்ல. “185 வர்த்தகர்கள் மற்றும் மருந்தக ஆபரேட்டர்கள் கட்டுப்பாட்டு விலைக்குக் கீழே விற்பதாகவும், மேலும் 1,552 பேர் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு ஏற்ப விற்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டது.மொத்தத்தில், வியாபாரிகள் விலை கட்டுப்பாட்டிற்கு இணங்க நன்கு ஒத்துழைக்கிறார்கள், ”என்றார்.

கிழக்கு பிராந்திய மலேசிய கட்டுமான அகாடமி, ஜெனாகோர் தடுப்பூசி மையத்தில் (பிபிவி) இன்று உலு திரங்கானு தடுப்பூசி செயல்முறையை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார். செப்டம்பர் 5 முதல், KPDNHEP ஒவ்வொரு செட் கோவிட் -19 சுய-சோதனை கருவிகளுக்கும் அதிகபட்ச சில்லறை விலையை RM19.90 இல் நிர்ணயித்தது, மொத்த விலை RM16 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கிடையில், நாடு முழுவதும் மீன் விலை உயர்வு பற்றி கேட்டபோது, ​​இந்த அதிகரிப்பு குறித்து எங்களுக்கு அதிகாரிகளிடம் இருந்து நேரடியாகப் புகார்கள் வந்தன, எனக்கு நேரடியாக, செலார் மீன் ஒரு கிலோவிற்கு RM16 க்கு விற்கப்படுகிறது, அதே நேரத்தில் ஈக்கான் கெம்போங் ஒரு கிலோவிற்கு RM22 வரை உள்ளது.

அதனால்  எதிர்காலத்தில்   Q’fish பயனீட்டாளர்களுக்கு மாற்றாக இருக்க முடியும். “க்யூஃபிஷ் மீன் பற்றி சந்தையில் விற்கப்படுவது, புதியதாக இல்லை என்ற தவறான கருத்தை முறியடிக்க சமூகம் கற்பிக்கப்பட வேண்டும்,  அது உண்மையல்ல. அது கடலில் இருந்து புதிய மீன் உறைய வைத்துக் கொண்டு வருவதல்ல, ”  என்றார் அவர்.

கியூ ஃபிஷ் என்பது தரமான புதிய மீனாகும், சந்தையில் உபரி ஏற்பட்டால் மலேசிய மீன்வள மேம்பாட்டு ஆணையம் (LKIM) மீன்களை  உறைய வைக்கும். சப்ளை பாதிக்கப் படாமல் இருப்பதை உறுதி செய்ய இது பயனீட்டாளருக்கு மலிவான விலையில் விற்கப் படுகிறது


Pengarang :