PBTPENDIDIKAN

செந்தோசா தொகுதியில் இளையோருக்கான தடுப்பூசித் திட்டம்- குணராஜ் பார்வையிட்டார்

கிள்ளான், செப் 24– இளையோருக்கான அனாக்-கூ கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் செந்தோசா தொகுதியில் உள்ள பத்து உஞ்சோர் தேசிய பள்ளியில் நேற்று தொடங்கியது. இளையோருக்கான தடுப்பூசித் திட்டதிற்காக கிள்ளான் மாவட்டத்தில்  அமைக்கப் பட்டுள்ள தடுப்பூசி மையங்களில் இதுவும் ஒன்றாகும். 

இந்த மையத்தில் நான்காம் மற்றும் ஐந்தாம் படிவங்களில் பயிலும் 600 மாணவர்கள் தடுப்பூசியைப் பெறுவர்.

மாணவர்களுக்கு  உற்சாகம் அளிக்கும் வகையில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ்  ஜோர்ஜ், கோலக் கிள்ளான் உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி, பண்டமாரான் உறுப்பினர் டோனி லியோங் ஆகியோர் நேற்று இந்த தடுப்பூசி மையத்திற்கு வருகைப் புரிந்தனர்.

இந்த தடுப்பூசித் திட்டம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பத்து உஞ்சோர் தேசிய பள்ளி நிர்வாகம், பெ.ஆ.சங்கம் உள்ளிட்ட தரப்பினருக்கு குணராஜ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

வரும் 2022 ஆம் ஆண்டு பள்ளித் தவணை தொடங்குவதற்குள் 80 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசி பெற்றிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த இயக்கம் மேற் கொள்ளப் படுகிறது. 

இவ்வாண்டு பொது தேர்வை எழுதவுள்ள 16 மற்றும் 17 வயது இளையோருக்கு இந்த தடுப்பூசித் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.


Pengarang :