ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 சுயப் பரிசோதனை கருவிகள் வாங்க மாநில அரசு வெ 10 லட்சம் செலவிட்டுள்ளது

ஷா ஆலம், செப் 28- சிலாங்கூரிலுள்ள கோவிட்-19 நோயாளிகளுகாக சுயப் பரிசோதனை கருவிகளை வாங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 12 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி தொகையில் 82.34 விழுக்காடு இதுவரை செலவிடப்பட்டுள்ளது.

மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி வரை பத்து லட்சம் வெள்ளியை மாநில அரசு செலவிட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நோய்த் தொற்று பரவல் காலத்தில் மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு மீது மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வந்துள்ளதாக அவர் சொன்னார்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கோவிட்-19 நோயாளிகள் தங்கள் உடல் நிலையை மதிப்பீடு செய்வதற்கு உதவும் இக்கருவிகளை விநியோகிப்பது தொடர்பான அறிவிப்பு மாநில அரசின் கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தில்  இடம் பெற்றுள்ளது.

மருத்துவமனைக்கு வெளியே நிகழும் கோவிட்-19 மரணங்களைத் தடுக்கும் நோக்கில் இந்த கருவிகள் விநியோகிக்கப்படுவதாக கூறிய மந்திரி புசார், முகக்கவசம், தெர்மாமீட்டர், ஆக்சிமீட்டர், மருந்துகள், உமிழ்நீர் வழி கோவிட்-19 சோதனை மேற்கொள்ளும் கருவி உள்ளிட்ட பொருள்கள் அந்த உபகரணப் பெட்டி உள்ளடக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இலவசமாக வழங்குவதற்காக 60,000 சய பரிசோதனைக் கருவிகளை மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளதாக மந்திரி புசார் கடந்த ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி கூறியிருந்தார்.

 


Pengarang :