Petugas Pejabat Kesihatan KLIA menjalankan tugas menyaring pengembara luar negara di pintu masuk negara pada 6 September 2020. Foto Facebook Noor Hisham Abdullah
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்று 1,231 ஆக உயர்வு:  நாட்டில் 11,332 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், செப் 28- சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று சற்று உயர்ந்து 1,231 ஆக ஆனது. நேற்று இந்த எண்ணிக்கை 979 ஆக மட்டுமே இருந்தது.

நாட்டில் இன்று 11,332  கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நேற்று இந்த எண்ணிக்கை 10,959 ஆக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சரவா மாநிலத்தில் மிக அதிகமாக 2,358 சம்பவங்கள் பதிவான வேளையில் அதற்கு அடுத்த நிலையில் 1,319 சம்பவங்களுடன் ஜோகூரும் 1,088 சம்பவங்களுடன் கிளந்தானும் உள்ளன. 
இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு- 

சபா – 965
பினாங்கு– 895
கெடா – 819
பேராக் – 678
பகாங் – 677
திரங்கானு – 629
மலாக்கா– 303
கோலாலம்பூர் – 240
நெகிரி செம்பிலான் – 89
புத்ரா ஜெயா – 19
பெர்லிஸ் – 19
லபுவான் – 3

Pengarang :