KUALA LUMPUR, 28 Sept — Ketua Pembangkang Datuk Seri Anwar Ibrahim membahaskan mengenai Rancangan Malaysia Ke-12 (RMK12) ketika Mesyuarat Penggal Keempat, Parlimen ke-14 di Bangunan Parlimen hari ini. –fotoBERNAMA (2021) HAK CIPTA TERPELIHARA
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

12 வது மலேசியா திட்ட செயலாக்கத்தை கண்காணிக்க நாடாளுமன்றத் தேர்வுக் குழு அவசியம்

ஷா ஆலம், 28 செப்டம்பர்: 12 வது மலேசியா திட்டத்தை (12 எம்பி) செயல்படுத்துவதை கண்காணிக்க  நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்க டத்தோஸ்ரீ அன்வர் இப்ராகிம் முன்மொழிந்தார். திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய அரசு மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவிடம் பொறுப்பு வழங்குவது குறித்து எதிர்க்கட்சி தலைவர் பேசினார்.

இந்த முன்மொழிவை பிரதமர் திறந்த மனப்பான்மையையுடன் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும், அது இந்த அரசாங்கம் வெறும் பேச்சு மட்டுமின்றி, மாற்று கருத்துக்கு இடமளிக்கும், பரிசீலிக்க தயாராகவுள்ள ஒன்று என்பதனை காட்ட முடியும் என்று நம்புகிறேன்.

“நாடாளுமன்றத்தில் ஒப்பந்தங்கள் மற்றும் விவாதங்கள், பொருளாதார மீட்சி, மறுமலர்ச்சி  உட்பட அனைத்து விஷயங்களையும் விரிவாக முன்வைக்கவும், கண்காணிக்க  அக்குழுவால்  முடியும். புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டுள்ளதால்  பில்லியன் கணக்கான மக்கள் பணம் இழக்கப்படும் போது நாங்கள் வாய் மூடி கிடந்து மக்களுக்கும், நாட்டுக்கும் துரோகம்  செய்ய விரும்பவில்லை” என்று அவர் இன்று பாராளுமன்றத்தில் 12MP பற்றி விவாதித்தார்.

போர்ட்டிக்சன் எம்.பி., அரசின் துணை நிறுவனங்கள் (ஜிஎல்சி) மற்றும் அரசுடன் இணைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் (ஜிஎல்ஐசி) மூலம் செயல்படுத்தப் படும் 12 மலேசிய மேம்பாடு திட்டங்களையும், கண்காணிக்க குழுவுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்றார்.

“இந்த குழு முக்கியமானது, காரணம் ஜிஎல்சியை நிர்வகிக்கும் தனிநபர்கள் இப்பொழுது ஜிஎல்சி எந்த அறிக்கையையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்றும் தங்களை எவரும் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள் என்றார் அவர்.


Pengarang :