MEDIA STATEMENTNATIONALPENDIDIKANSELANGOR

இலவச இணைய தரவு முறையாகப் பயன்படுத்துவதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்

ஷா ஆலம், செப் 29- சிலாங்கூர் மாநில அரசினால் இலவசமாக வழங்கப்படும் இலவச இணைய தரவு சேவையை மாணவர்கள் முறையாகப் பயன்படுத்துவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவையற்ற நோக்கங்களுக்காக அந்த இணையத் தரவு பயன்படுத்தப்படாமலிருப்பதை உறுதி செய்ய இந்த கண்காணிப்பு அவசியமாகிறது என்று கோல சிலாங்கூர் மாவட்ட கல்வி அதிகாரி முகமது அஸூவான் முகமது நவாவி கூறினார்.

வீட்டிலிருந்து கற்றல்,கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கிய மாணவர்களுக்கு இந்த இலவச இணைய தரவு சேவை புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

எனினும், தங்கள் பிள்ளைகளின் இணைய பயன்பாட்டை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அந்த சேவையை பிள்ளைகள் பயனான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.

பி.டி.ஆர்.எஸ். எனப்படும் சிலாங்கூர் டியூஷன் ராக்யாட் திட்டத்தில் பங்கேற்றுள்ள 7,000 மாணவர்களுக்கு இந்த இலவச இணைய தரவு சேவைக்கான சிம் கார்டுகளை மந்திரி புசார் நேற்று முன்தினம் ஒப்படைத்தார்.

இதனிடையே, பன்னிரண்டு மாதங்களுக்கு இலவசமாக இணைய தரவு சேவையை வழங்கும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய சிலாங்கூர் மாநில அரசுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக உலு சிலாங்கூர் மாவட்ட கல்வி அதிகாரி ரோஸ்லினா அப்துல் கனி கூறினார்.

இத்திட்டத்தின் கீழ் உலு சிலாங்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த 43 மாணவர்கள் பயன் பெற்றுள்ளதாக கூறிய அவர், மேலும் அதிகமான மாணவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.


Pengarang :