SHAH ALAM, 4 Okt — Kanak- kanak autistik, K. Rashwin, 4, (tiga, kanan) menerima sijil The Malaysia Book of Records (MBR) daripada Senior Record Consultant MBR, Edwin Yeoh (kiri) pada majlis penyampaian sijil tersebut di Headstart Academy, hari ini. Kanak-kanak tersebut dianugerahkan sijil MBR atas kepintarannya berjaya mengenal pasti bendera 198 buah negara dalam masa sembilan minit. Turut hadir kedua ibubapanya, S. Kalithas, 40, (dua, kanan) ibunya B. Krishnarani, 36, (kanan) dan Pengasas dan juga Pengarah Urusan Headstart Academy, Khairul Ramly (dua, kiri). — fotoBERNAMA (2021) HAK CIPTA TERPELIHARA
ACTIVITIES AND ADSSELANGORWANITA & KEBAJIKAN

10 நிமிடங்களில் 198 நாடுகளின் கொடிகளின்பெயர்- மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தான் 4 வயது ரஷ்வின் காளிதாஸ்

ஷா ஆலம். அக் 5- உடற்பேறு குறையுடைய நான்கு வயது சிறுவனான ரஷ்வின் த/பெ காளிதாஸ் 198  நாட்டுக் கொடிகளின் பெயரை 9 நிமிடம் 54 விநாடிகளில் கூறியதன் மூலம் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான்.

ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவன் புரிந்த இச்சாதனை வியக்கத்தக்க ஒன்று என மலேசியன் புக் ஆப் ரொக்கார்ட்ஸ் அமைப்பின் தலைமை ஆலோசகர் எட்வின் இயோ கூறினார்.

வழக்கமாக ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு விஷயத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்தும் ஆற்றல் குறைவானவர்களாகவும் விரைவாக கவனச் சிதறலுக்கு ஆட்படுபவர்களாகவும் இருப்பர் என்று அவர் குறிப்பிட்டார்.

இயங்கலை வாயிலாக இரு முறை மேற்கொண்ட முயற்சியில் ரஷ்வின் தோல்வி கண்டார். எனினும் மூன்றாவது முயற்சியில் அவர் அவர் பழைய சாதனையை முறியடித்து வெற்றி கண்டார் என்றார் அவர்.

இந்த பிரிவில் பழைய சாதனையை நெகிரி செம்பிலானைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் வைத்திருந்தார். அவர் இவ்வாண்டு தொடக்கத்தில் இச்சாதனையைப் புரிந்தார் என அவர் குறிப்பிட்டார்.

பெரியவர்களைக் கொண்டு சோதித்தால்கூட ரஷ்வின் போல் விரைவாக பதிலளிக்க முடியுமா என்பது  சந்தேகமே.  குறைவான நினைவாற்றலும் கவனச் சிதறலும் உள்ள ரஷ்வின் போன்ற சிறார்கள் இத்தகைய சாதனையைப் புரிந்தது உண்மையில் பாராட்டத்தக்கது என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :