ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தொடர்பில் டிவிட்டரில் பொய்ச் செய்தி- போலீசில் புகார் செய்ய கைரி உத்தரவு

கோலாலம்பூர், அக் 9- கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் தடுப்பூசித் திட்டம் தொடர்பில் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பொய்ச் செய்தி தொடர்பில் போலீஸ் மற்றும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லுடாக ஆணையத்தில் (எம்.சி.எம்.சி.) புகார் செய்யும்படி சுகாதார அமைச்சர்  கைரி ஜமாலுடின் உத்தரவிட்டுள்ளார்.

அந்த பொய்ச் செய்தியை வெளியிட்ட டிவிட்டர் பயனர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி சுகாதார அமைச்சுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக கைரி தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

கற்றுத் தருவதற்கும் அறிவுரை கூறுவதற்கும் காலம் உள்ளது. அதே போல் சட்டத்தை அமல்படுத்துவதற்கும் காலம் உள்ளது. ஆகவே, கோவிட்-19 தடுப்பூசி காரணமாக உயிரிழந்தவர்களின் பட்டியலை வெளியிட்ட @காளிதாஸ்  டிவிட்டர் கணக்கின் உரிமையாளருக்கு  எதிராக  புகார் செய்யும்படி போலீஸ் மற்றும் எம்.சி.எம்.சி.யிடம் புகார் செய்யும்படி பணித்துள்ளேன் என்றார் அவர்.

@காளிதால் என்ற அந்த 31 விநாடி டிவிட்டர் பதிவில் தடுப்பூசி காரணமாக உயிரிழந்த பள்ளி ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.


Pengarang :