HEALTHMEDIA STATEMENTNATIONAL

பண்டமாரான் தொகுதியில் வெள்ளம்- ஏழு பகுதிகள் பாதிப்பு

ஷா ஆலம், அக்  21- நேற்று பெய்த அடை மழை காரணமாக பண்டமாரான் தொகுதியிலுள்ள ஏழு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளைச் சேர்ந்த 500 வீடுகள் பாதிக்கப்பட்டன.

ஜாலான் முகமது யாமின், தாமான் சீ லியோங், தாமான் பாயு பெர்டானா, தாமான் மெலாவின், ஜாலான் செக்கோலா ஆகியவையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.

இந்த வெள்ளம் காரணமாக ஜாலான் முகமது யாமின் பகுதியைச் சேர்ந்த மூன்று குடும்பங்கள் டத்தோ ஹம்சா தேசிய இடைநிலைப்பள்ளியில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டதாக பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் டோனி தக் சீ கூறினார்.

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அடையாளம் காணும்படி ஊராட்சி மன்ற உறுப்பினர்களை தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

வெள்ள நீரை வெளியேற்றக் கூடிய நீர் அழுத்த  பம்ப் கருவிகளை முறையாக செயல்படுகின்றனவா என்பதை நாங்கள் சோதிக்கவுள்ளோம். பாயு பெர்டானாவிலுள்ள நீர் அழுத்த கருவி முறையாக செயல்படவில்லை என்ற தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதனை பழுதுபாக்க கிள்ளான் நகராண்மைக் கழக தரப்பினர் அங்கு விரைந்துள்ளனர் என்றார் அவர்.

நேற்று மாலையில் மழை தணியத் தொடங்கியதைத் தொடர்ந்து வெள்ளம் வடியத் தொடங்கியதாகக் கூறிய அவர், மறுபடியும்  மழை பெய்யாத பட்சத்தில் நிலைமை சீரடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுவதாக சொன்னார்.


Pengarang :