ECONOMYMEDIA STATEMENTNATIONAL

செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் இளையோருக்கு செல்கேர் கிளினிக்குகளில் தடுப்பூசி

ஷா ஆலம், அக் 31- தடுப்பூசி பெறுவதற்கான முன்பதிவை இன்னும் பெறாத 12 முதல் 17 வயது வரையிலான இளையோர் சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள செல்கேர் கிளினிக்குகளில் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறலாம்.

இரண்டாவது தடுப்பூசிக்கான முன்பதிவு தேதியை தவற விட்ட உள்நாட்டினர் மற்றும் அந்நிய வெளிநாட்டுப் பிரஜைகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள யாரும் தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபடாமலிருப்பதை உறுதி செய்வதற்காக மாநில அரசு செல்வேக்ஸ் திட்டத்தை செல்கேர் கிளினிக்குகளில் கடந்த 28 ஆம் தேதி தொடங்கி மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

செலங்கா செயலி வாயிலாக தடுப்பூசிக்கான முன்பதிவை பெறக்கூடிய 10 செல்கேர் கிளினிக்குகளின் பெயர் மற்றும் பற்றுச் சீட்டு குறியீட்டு எண்களை அவர் வெளியிட்டுள்ளார்.

கிளினிக்குகளின் பெயர்கள் மற்றும் குறியீட்டு எண்கள் வருமாறு-

Klinik                                                                  Kod baucar
The KL Clinic Bangunan Rohas Perkasa         TKCBRP

The KL Clinic Menara Olympia                          TKCMO
The KL Clinic Menara Hap Seng 2                    TKCMHS

The KL Clinic Sri Rampai                                    TKCSR

Selcare Clinik Puchong                                       SCPCHG

Selcare Clinik USJ Sentral                                  SCUSTL

Selcare Clinik Skypark Lapangan Terbang      SCKLTS
Subang

Selcare Clinik Seksyen 13 Shah Alam               SCSSAM

Selcare Clinik Sentosa                                         SCSTSN

Selcare Clinik Putrajaya                                       SVCPTJ

 


Pengarang :