ECONOMYPBTSELANGOR

தடுப்பூசி பெறுவதை எளிதாக்க சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டம் உதவி

ஷா ஆலம், நவ 3- சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உள்ள செல்கேர் கிளினிக்குகளில் மேற்கொள்ளப்படும் பெரியவர்கள் மற்றும் இளையோருக்கான தடுப்பூசி இயக்கம் மேலும் அதிகமானோர் தடுப்பூசி பெறுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டம் மூலம் 12 முதல் 17 வயது வரையிலான இளையோர் தடுப்பூசி பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதோடு தடுப்பூசி பெறுவதற்கான தேதி கிடைக்காதவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி பெறுவதற்கான தேதியை தவறவிட்டவர்கள் தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

நேற்று முன்தினம் தொடங்கி கடந்த இரு தினங்களில் சுமார் 20 பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக  செக்சன் 13 இல் உள்ள செல்கேர்  கிளிக்கின் மருத்துவர் கூறினார்.

பெரும்பாலான பெற்றோர்கள் சிலாங்கூர் மாநில அரசின் தடுப்பூசியை தங்கள் பிள்ளைகளுக்குச் செலுத்த விரும்புகின்றனர். கோவிட்-19 நோயைத் தடுப்பதில் ஆக்ககரமான பலனைத் தருகிறது என்று அவர்கள் நம்புவதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று டாக்டர் முகமது அஸ்லான் முகமது அமின் கூறினார்.

கோவிட்-19 தடுப்பூசியை பெறுவதிலிருந்து யாரும் விடுபடாமலிருப்பதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்ட இந்த செல்வேக்ஸ் தடுப்பூசி இயக்கம் சிலாகூர் மற்றும் பேராக்கில் நேற்று முன்தினம் தொடங்கியது.

காஜாங், பத்தாங் காலி, கோல சிலாங்கூர், சுங்கை புசார், அம்பாங், பண்டார் மக்கோத்தா செராஸ், புக்கிட் சங்காங், பூச்சோங், கோம்பாக், தஞ்சோங் மாலிம் ஆகிய இடங்களில் உள்ள செல்கேர் கிளினிக்குகளில் இந்த தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.


Pengarang :