தீபாவளியைக் கொண்டாட இந்துகளுக்கு சுமார் 20 லட்சம் ரிங்கிட் மாநில அரசு செலவிட்டுள்ளது

ஷா ஆலாம், 5 நவ: குறைந்த வருமானம் கொண்ட (B40) பிரிவு  இந்திய சமூகத்தினர் தீபாவளி பண்டிகை கொண்டாட மாநில அரசு கிட்டத்தட்ட RM2 மில்லியன் செலவிட்டுள்ளது. ஜாம் ஷாப்பிங் ராயா வவுச்சர் மூலம் உதவி பெறுபவர்கள் சில (சூப்பர்மார்க்கெட்) மற்றும் பல்பொருள் அங்காடிகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டதாக சமூக பொருளாதார மேம்பாடு, சமூக நலன், தொழிலாளர் ஆற்றல் ஆட்சிக்குழு உறுப்பினர்  வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

“தொற்றுநோய் காரணமாக, நாங்கள் திறந்த இல்ல உபசரிப்புகளை இவ்வாண்டு ஏற்பாடு செய்ய முடியவில்லை. இருப்பினும், தலா 55 ரிங்கிட் மதிப்பிலான 3,500 உணவு கூடைகளை சிலாங்கூர் இந்திய சமூகத் தலைவர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகித்தோம். என்று வீ.கணபதிராவ் கூறினார்.

இன்று கோத்தா கெமுனிங்கில் உள்ள, கோத்தா பெர்மை கோல்ஃப் & கண்ட்ரி கிளபில் அவர் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் இதனை தெரிவித்தார். இந்த உபசரிப்பில் டத்தோ மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் அவரது மனைவி டத்தின் ஶ்ரீ மஸ்டியானா முஹம்மது, பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் மற்றும் மாநிலச் செயலாளர் டத்தோ ‘ஹாரிஸ் காசிம் ஆகியோரும்  கலந்து கொண்டனர்.

மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சியாக B40 குறைந்த வருமானம் கொண்ட பிரிவு மக்களை குறிவைத்து சிலாங்கூர் மாநில அரசு (Jom Shopping Raya – வாங்க பொருட்களை வாங்கலாம்) என்ற திட்டத்தை கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

அந்தந்த பண்டிகையின் போதும் இனம் மற்றும் திருவிழாக்களின் முக்கிய கூறுகளுக்கு ஏற்ப உதவிகள் கை அளிக்கப் படுகின்றன.


Pengarang :