Rusia mengumumkan mendaftarkan vaksin Covid-19 pertama di dunia, dikenali Sputnik V. Foto: REUTERS
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

95.2 பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், நவ 15- நாட்டிலுள்ள பெரியவர்களில்  95.2 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 22 லட்சத்து 97 ஆயிரத்து 446 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும், 97.6 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 28 லட்சத்து 65 ஆயிரத்து 60 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 86.9 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 35 ஆயிரத்து 720 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ள வேளையில் 79.8 விழுக்காட்டினர் அல்லது 25 லட்சத்து 12 ஆயிரத்து 231 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

நேற்று நாடு முழுவதும் 43,731 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. தடுப்பூசி பெற்றவர்களில் 9,959 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகவும் 3,117 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் பெற்ற வேளையில் 30,655 பேருக்கு ஊக்கத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின்  கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரத்து 152 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :