BUTTERWORTH, 17 Nov — Sebuah pesawat pejuang Hawk 108 milik Tentera Udara Diraja Malaysia (TUDM) terhempas di kawasan landasan Pangkalan Udara Butterworth malam tadi. Dalam kejadian tersebut, seorang juruterbang TUDM Kapt Mohamad Affendi Bustamy meninggal dunia sementara Mejar Mohd Fareez Omar yang cedera berada dalam keadaan stabil dan kini menerima rawatan di Hospital Seberang Jaya, Pulau Pinang. –fotoBERNAMA (2021) HAK CIPTA TERPELIHARA
MEDIA STATEMENTNATIONAL

போர் விமான விபத்தில் காயமடைந்த விமானியின் உடல் நிலை சீராக உள்ளது

ஷா ஆலம், நவ 19– பட்டர்வெர்த் ஆகாயப் படைத் தளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த விமான விபத்தில் காயமடைந்த அரச மலேசிய ஆகாயப் படையின் விமானி மேஜர் முகமது பாரீஷ் ஓமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

செபெராங் பிறை மருத்துவமனையில் கடந்த புதன் கிழமை முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மேஜர் முகமது பாரீஷின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக அரச மலேசிய ஆகாயப் படை வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

பாரீஷிக்கு எந்த சிக்கலுமின்றி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு தற்போது உணர்வு திரும்பியுள்ளதோடு உடல் நிலையும் சீராக உள்ளது என அந்த அறிக்கை தெரிவித்தது.

ஹாக் 108 போர் விமானம் சம்பந்தப்பட்ட அந்த விபத்து தொடர்பில் விரிவான விசாரணையை மேற்கொள்ள அரச மலேசிய ஆகாயப் படை விசாரணை வாரியத்தை அமைத்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.07 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் கேப்டன் முகமது அப்பாண்டி புஸ்தாமி மரணமடைந்தார்.


Pengarang :